இனி பிறக்கும் குழந்தைகள் 100 ஆண்டுகள் வாழுமாம்


2012ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வரை வாழ்வார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தை சேர்ந்த முதலீட்டு நிறுவனமொன்று நடத்திய ஆய்வில், 2012ஆம் ஆண்டில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் 100 வயது வாழ்வார்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் 70 வயது வரை வேலை செய்வார்கள் என்றும், தங்கள் தாத்தா- பாட்டியை விட 8 ஆண்டுகள் தாமதமாகவே திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளின் வாழ்வு அவர்களின் பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டி ஆகியோரின் வாழ்வை விட வித்தியாசமாக இருக்கும்.
இந்த ஆண்டு பிறந்த குழந்தைகள் 31 வயதில் தான் முதல் குழந்தையை பெற்று கொள்வார்களாம். மேலும் பலர் குழந்தையே பெற்று கொள்ள மாட்டார்களாம். அப்படியே பெற்றுக் கொண்டாலும் ஒன்றோடு நிறுத்திக் கொள்வார்களாம்.
2012ஆம் ஆண்டு பிறந்த- பிறக்கும் குழந்தைகளில் 39 சதவிகித பெண் குழந்தைகளும், 32 சதவிகித ஆண் குழந்தைகளும் 100வது பிறந்தநாளை கொண்டாடுவார்கள். அதாவது ஆண்களை விட அதிகமான பெண்கள் 100 வயதை தொடுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...