அண்ணன் தம்பி பாசம் என்றால் இதுதான்
வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் பிரியாணி படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவர்களுடன் பிரேம்ஜி, சாம் ஆண்டர்சன், சினேகா, பிரசன்னா, ராம்கி என ஒரு நட்சத்திர பட்டாளமே பிரியாணியில் உள்ளனர்.
இவர்களுடன் பிரேம்ஜி, சாம் ஆண்டர்சன், சினேகா, பிரசன்னா, ராம்கி என ஒரு நட்சத்திர பட்டாளமே பிரியாணியில் உள்ளனர்.
பிரியாணி படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரியாணி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட் செய்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார் சூர்யா.
சூர்யாவை திடீரென பார்த்ததும் பிரியாணி குழுவினர் அனைவரும் செய்வதறியாமல் திகைத்து நின்றுள்ளனர்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்ட சூர்யா, அனைவருடனும் சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பி சென்றிருக்கிறார்.
வேலை நிமித்தம் பாண்டிச்சேரி வந்த சூர்யா, தம்பிக்காக பிரியாணி ஸ்பாட்டுக்கு சென்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ஒரே தோற்றத்தில் மட்டுமே நடித்து வந்த கார்த்தி பிரியாணி படத்திற்காக தனது கெட்டப்பை மாற்றி இருக்கிறார்.
இப்படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.