Ajithக்கு அறுவை சிகிச்சை சோகத்தில் ரசிகர்கள்
சிறந்த கார் பந்தய வீரரான நடிகர் அஜித்குமார், கடந்த வருடங்களில் பிரித்தானியாவில் நடந்த கார் பந்தயங்களில் பங்கு பெற்றிருக்கிறார். இப்பந்தயங்களில் பங்கு பெற்றிருந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துகளில் அஜித் தனது முதுகில் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டார். இதை பலமுறை பேட்டிகளில் அஜித்தே தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தற்சமயம் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கும் அஜித், படப்பிடிப்பின் போது காயமடைந்தார். இந்த காயம் முதுகை பாதித்ததால் டொக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளனர். எனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பதற்கு முன்பே அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது தன் கையில் உள்ள படங்களை முடித்த பின்பே அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாக அஜித்திற்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். |