பாடகி மடோனாவின் உள்ளாடைக்கு 18 இலட்சம் (singer Madonna)

அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பொப் பாடகி மடோனாவின் உள்ளாடை ரூ.18 லட்சத்திற்கு ஏலத்திற்கு விற்கப்பட்டது.
பொப் பாடகி மடோனா, பல பொப் இசை வீடியோ ஆல்பங்களை தயாரித்து உள்ளார்.
மேலும் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து இசை நிகழ்ச்சி நடத்தி வரும் இவர் பல விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில் இவர் அணிந்த பிரா ஒன்று தென்மேற்கு லண்டனில் உள்ள கிறிஸ்டி மையத்தில் ரூ.18 லட்சத்துக்கு ஏலத்திற்கு விற்கப்பட்டது.
ஜீன்பால் கவுல்டியரால் வடிவமைக்கப்பட்ட இந்த பிரா, பச்சை நிறம் கொண்டது, பட்டுத் துணியால் தயாரிக்கப்பட்டது.
கடந்த 1990ம் ஆண்டு நடந்த 'ஹங்கி பங்கி' இசை நிகழ்ச்சியின்போது இந்த பிராவை மடோனா அணிந்திருந்தார்.
இது சுமார் ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இது அதை விட அதிகமாக சுமார் 2 மடங்கு ஏலம் போயுள்ளது. இதை ஏலம் எடுத்தவர் யார் என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
இது தவிர கறுப்பு நிற நீச்சல் உடை போன்று வடிவமைக்கப்பட்ட 'விக்ரா' உடையும் ஏலம் விடப்பட்டது. இது ரூ. 9 லட்சத்துக்கு ஏலம் போனது.


Related Posts Plugin for WordPress, Blogger...