துப்பாக்கிக்கு ஆப்பா குமருகிறார் விஜய் | Thuppaki Movie

ரே வாரத்தில் சுமார் 65 கோடி ரூபாயை வசூல் செய்த துப்பாக்கி படம் இப்போது வசூலில் டல்லடிக்க ஆரம்பித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
விஜய், காஜல் அகர்வால் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷனில் ரிலீஸான துப்பாக்கி படத்தில் முஸ்லீம்களை அப்படியே அப்பட்டமாக தீவிரவாதிகளாக காட்டுவதாக முஸ்லீம்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு கிளம்பியது.
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் எதிரில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
சர்ச்சைக்குரிய சீன்கள் எல்லாமே கண்டிப்பாக நீக்கப்படும் என்று கடந்த ஒருவாரமாக சீன் போட்டு வந்த படத்தின் புரொடியூசர் கலைப்புலி எஸ்.தாணு இதுவரை சொன்னபடி எந்த சீனையும் கட் பண்ணவில்லையாம்.
இதனால் கடுப்பான இஸ்லாமிய அமைப்பினர் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும், துப்பாக்கி படம் ஓடும் தியேட்டர்களை முற்றுகையிடப் போவதாகவும் எச்சரித்ததை தொடர்ந்து ‘துப்பாக்கி’ படத்தை இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு திரையிட்டு காட்டினர்.
படத்தை பார்த்து ஆட்சேபித்த 5 காட்சிகளை படத்தில் இருந்து நீக்க ஒப்புக் கொண்டதாக இந்திய தேசிய லீக் தலைவர் ஜவஹர் அலி கூறியிருக்கிறார்.
# மும்பை நகரில் குண்டு வைக்கும் 12 பேரை முஸ்லீம்கள் என்று அவர்களது பெயர்களை விஜய் பட்டியலிடுவது போன்ற காட்சி
# முஸ்லீம்கள் பயங்கரவாதிகள் என்று பேசுவது போன்ற வசன காட்சி
# ஹீரோ விஜய்யின் தங்கையை தீவிரவாதிகள் கடத்தி சென்று கொலை செய்ய முயற்சிப்பதற்கு முன்பாக ‘குரான்’ ஒதுவது போன்ற காட்சி
உட்பட மொத்தம் 5 சர்ச்சைக்குரிய காட்சிகள் படத்தில் கத்தரி போடப்பட்டுள்ளதாம். இப்படி ஒரேடியாக படத்தில் 5 காட்சிகள் கத்தரிக்கு இரையாகி விட்டதால் படம் பார்க்கப் போன ரசிகர்களில் பெரும்பாலானோர் கண்டினியுட்டி மிஸ்ஸான கடுப்பில் தியேட்டர்களில் கத்திக் கொண்டே வெளியேறி விடுகிறார்களாம்.
மேலும் முதல் வாரத்தில் வந்த ரிபீட் ஆடியன்ஸ் கத்தரி போட்ட துப்பாக்கியைப் பார்க்க ரிட்டன் வராததால், கோடிக்கணக்கில் போய்க் கொண்டிருந்த துப்பாக்கியின் வசூல் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்திருக்கிறதாம்.

Related Posts Plugin for WordPress, Blogger...