ஆப்பிள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஆப்பூ
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தனது ஐபேட் சாதனத்தின் மூன்றாம் பதிப்பை "The New iPad" என்ற பெயரில் வெளியிட்டது.
உலகமெங்கும் ஐபேடை விற்பனை செய்துவரும் ஆப்பிள், ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யும் போது அதன் விளம்பரத்தில் சொல்லப்பட்ட ஒரு வாசகத்தால் தற்போது 2.25மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட பதினொரு கோடி) அபராதம் கட்ட போகிறது.
பல புதிய வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபேடில் உள்ள முக்கிய வசதி 4G வசதியாகும். ஆனால் இது அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சில மொபைல்நிறுவனங்களில் மட்டும் தான் வேலை செய்யும்.
ஆஸ்திரேலியாவில் விளம்பரம் செய்யும் போது "Wi-Fi + 4G" என்று விளம்பரம் செய்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் இரண்டு மொபைல் நிறுவனங்கள் தான் 4G வசதியை தருகின்றன. ஆனால் அந்த இரண்டிலும் ஐபேட் 3 வேலை செய்யாது. இந்த விளம்பரம் வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்துகிறது என்று ஆஸ்திரேலியாவில் உள்ள Australian Competition and Consumer Commission (ACCC) என்ற நுகர்வோர் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு 2.25 மில்லியன் ஆஸ்திரேலியா டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட பதினோரு கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
தற்போது அந்த விளம்பரத்தை "Wi-Fi + Cellular" என்று மாற்றியுள்ளது. மேலும் விற்பனை செய்யப்பட ஐபேடை வாடிக்கையாளர்கள் விரும்பினால் திரும்ப தந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிஸ்கி: இதை செய்தியை படிக்கும் போது "இந்த கிரீமை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏழே நாளில் உலக அழகி ஆகலாம்" என்பது போன்ற விளம்பரங்கள் தான் நினைவிற்கு வருகிறது