உலகை கலக்கும் பாடகன் ! ( Gangnam )

ஒரு வீடியோவை 1லட்சம் பேர் பார்ப்பதே பெரிய விஷயமாக இருக்கும் இந்த நாளில், ஒரு வீடியோவை 1 பில்லியன் பேர் பார்த்திருக்கிறார்கள்.
அது கங்னம் ஸ்டைல் (Gangnam Style) என்ற ராப் பாடல் வீடியோ

கங்னம் ஸ்டைல்?

தென் கொரியாவின் ராப் பாடகர் சி உருவாக்கி, கடந்த அக்டோபர் 4-ம் தேதி சியோல் சிட்டி ஹாலில் பாடி ஆடிய இந்தப் பாடலின் வீடியோ, கடந்த ஜூலை மாதம் யு ட்யூபில் அப்லோட் செய்யப்பட்டது.

830 மில்லியன் பார்வையாளர்கள்…

கடந்த நான்கு மாதங்களில் இந்தப் பாடலை 830 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். விரைவில் 1 பில்லியன் என்ற எண்ணிக்கையை இந்த பாடல் தொடவிருக்கிறது.

உலக சாதனை

யுட்யூபில் இதுவரை வேறு எந்த புகழ்பெற்ற பாடகருக்கும் இத்தனை பெரிய பார்வையாளர் எண்ணிக்கை கிடைத்ததில்லை. மைக்கேல் ஜாக்ஸன் பாடல்களுக்குக் கூட அதிகபட்சமாக 10 மில்லியன் பார்வையாளர்கள்தான் கிடைத்துள்ளனர்.

ஜஸ்டின் பைபரைத் தாண்டினார் சி

இதுவரை ஜஸ்டின் பைபரின் பேபி பாடலுக்குதான் அதிக பார்வையாளர்கள் கிடைத்ததாக சொல்லப்பட்டு வந்தது. அவரது இந்தப் பாட்டை 805 மில்லியன் பேர் பார்த்திருந்தனர்.
இப்போது சி அதனை வெகு வேகமாக தாண்டிவிட்டார். எம்டிவி இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாளொன்று சராசரியாக 7 முதல் 10 மில்லியன் பார்வையாளர்கள் இந்த கங்னம் ஸ்டைல் பாடலைப் பார்த்து வருகிறார்களாம். சனிக்கிழமைகளில் 11 மில்லியனைத் தாண்டுகிறதாம்.

கங்னம் என்றால் என்ன?

கங்னம் என்பது தென் கொரியாவின் சியோலில் மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். பாட்டுக்கும் இந்த மாவட்டத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ச்சும்மா… ஒரு ப்ளோவில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பள்ளிக்குழந்தைகள் மத்தியில்..

கிட்டத்தட்ட ஒரு குதிரை டான்ஸ் ஆடினால் எப்படியிருக்குமோ அப்படியொரு முரட்டுத்தனமான இந்த டான்ஸ் இன்று இணையத்தின் தயவால் இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட பிரபலமாகியிருக்கிறது.
குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இந்த பாடல் ரொம்ப பாப்புலர்.

கூகுள் கூகுள் உல்டா…

கிட்டத்தட்ட இந்தப் பாடலைத்தான் கூகுள் கூகுள் என்று துப்பாக்கியில் விஜய் பாடுவது போல உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக அந்த இசையும் பீட்டும் அப்படியே கங்னம் ஸ்டைலை காப்பியடித்ததுதான் என்பது புரிந்து கோடம்பாக்கம் நமுட்டு சிரிப்பு சிரிக்கிறது!




-->
Related Posts Plugin for WordPress, Blogger...