முஸ்லிம்களை இழிவு படுத்தியவர்களுக்கு மரண தண்டனை !
முகமது நபியை மோசமாக சித்தரித்து படம் தயாரித்த ஏழு பேருக்கு எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
-->
அமெரிக்காவில் முஸ்லிம்களை இழிவுப்படுத்தும் வகையில் Innocence Of Muslim என்ற படம் வெளியானது.
இப்படத்திற்கு எகிப்து, லிபியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உட்பட உலகம் முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றன.
மேலும் லிபியாவில் அமெரிக்க தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்த படத்தை தயாரித்த எகிப்து நாட்டை சேர்ந்த நகோலா பாஸ்லி உள்ளிட்ட ஏழு கிறிஸ்தவர்களுக்கு மரண தண்டனை விதித்து கெய்ரோ குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவர்கள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.