சம்சுங்கும் நெக்ஸ்உம் ஒரு பார்வை


சாம்சங் கேலக்ஸி எஸ்-3 மினி மற்றும் எல்ஜி நெக்சஸ்-4 ஆகிய இந்த 2 ஸ்மார்ட்போன்கள் பற்றிய ஓர் ஒப்பீட்டு அலசலை இங்கே பார்க்கலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சிறப்பான தொழில் நுட்ப வசதியினை கொண்டதாக இருக்கும். இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன்களுக்கிடையில் இருக்கும் சில ஒற்றுமைகளையும், வேறுபாடுகளையும் பார்க்கலாம்.
எல்ஜி மற்றும் கூகுள் நிறுவனம் இணைந்து உருவாக்கிய நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.2 இயங்குதளத்தினை கொண்டதாக இருக்கும். கேலக்ஸி எஸ்-3 மினி ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்குவதாக இருக்கும்.
கேலக்ஸி எஸ்-3 மினி அறிமுகம் செய்யும் சாம்சங்!
கேலக்ஸி மினி ஸ்மார்ட்போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸர் வழங்கப்படும். நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ்
வேகத்தில்குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 ப்ரோ பிராசஸரை பெறலாம்.
கேலக்ஸி மினி ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் மற்றும் விஜிஏ முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும். கூகுள் நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவையும், 1.3 முகப்பு கேமராவையும் கொடுக்கும்.
ஆப்பிள் ஐபோன்-5 மற்றும் எல்ஜி நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!
கேலக்ஸி மினி ஸ்மார்ட்போனின் முகப்பு கேமராவின் பிக்சலையும் விட, நெக்சஸ்-4 ஸ்மார்ட்போனின் முகப்பு கேமரா சற்று அதிக பிக்சலை கொண்டதாக இருக்கும். இந்த 2 ஸ்மார்ட்போன்களும் 8 ஜிபி/16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை கொண்டதாக இருக்கும். இதில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் மைக்ரோஎஸ்டி வசதி 32 ஜிபி வரை மெமரி வசதிக்கு சப்போர்ட் செய்யும். இதில் வைபை ப்ளூடூத் மற்றும் என்எப்சி நெட்வொர்க் வசதிக்கு சிறப்பாக துணை புரியும்.
வையர்லெஸ் சார்ஜர் வசதி கொண்ட டாப்-5 ஸ்மார்ட்போன்கள்
கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 1,500 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும், நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் 2,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினையும் கொண்டதாக இருக்கும். இதனால் நெக்சஸ்-4 ஸ்மார்ட்போனில் சிறப்பாக 15.3 மணி நேரம் டாக் டைம் மற்றும் 390 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் கொடுக்கும்.
கேலக்ஸி எஸ்-3 மற்றும் நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. கூடிய விரைவில் ஆன்லைன் வலைத்தங்களில் இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ. 23,490 (8ஜிபி) மற்றும் ரூ. 27,490 (16ஜிபி) விலையிலும் இந்த ஸ்மார்ட்போன்களை பெறலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த செய்தியினை ஆங்கிலத்தில் படிக்கலாம்

Related Posts Plugin for WordPress, Blogger...