துப்பாக்கி ஒரு வாரத்தில் 40 கோடி

விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தீபாவளிக்கு இப்படம் ரிலீசானது. ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ. 65 கோடியே 32 லட்சம் வசூலித்து உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஆறு நாட்களில் ரூ. 40 கோடி வசூலித்து உள்ளது. 

தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆந்திரா, கேரளாவிலும் நன்றாக ஓடுகிறது. உலகம் முழுவதும் ஆயிரம் தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டு உள்ளது. 

இங்கிலாந்தில் ரூ. 1.18 கோடியும், அமெரிக்காவில் ரூ. 1.76 கோடியும் ஆஸ்திரேலியாவில் ரூ. 37.99 லட்சமும் ஒரு வாரத்தில் வசூலித்து உள்ளது. 

இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதனால் விஜய், படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தற்போது சர்ச்சைக்குரிய வசனங்கள் நீக்கப்பட்டு உள்ளன.

Related Posts Plugin for WordPress, Blogger...