Youtube க்கு எதிராக ஓர் இஸ்லாமிய இணையதளம் ( Islamic Website launched )

இணையத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகள் பரப்புவதை தடுக்க ஈரான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மேற்கத்திய நாடுகளில் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூடியூப் போன்ற இணையங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு தகவல்கள் வெளிவருவதாக ஈரான் அரசு தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது.
இதனையடுத்து யூடியூப் உட்பட பல்வேறு இணையங்களை ஈரான் அரசு தடை செய்துள்ளது. இதனால் மக்கள் தகவல்கள் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில் www.mehr.ir என்ற பெயரில் புது இணையத்தை ஈரான் அரசு தொடங்கி உள்ளது.
இதில் ஈரானியர்களுக்கு தேவையான தகவல்கள், இஸ்லாமிய கலாசாரம், கலைஞர்கள் போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த இணையத்தை தொடர்ந்து கண்காணித்து வருவோம், சென்சார் செய்வோம் என்று ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




Related Posts Plugin for WordPress, Blogger...