காண்டக்ட் லென்ஸ் மூலம் SMS படிக்க ( Latest Technology )
குறுஞ்செய்திகளை(SMS) திரையிடும் Contact Lens-களை உருவாக்கி அறிவியலாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பெல்ஜியத்தின் க்ஹென்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த அறிவியலாளர்களே இதனை தயாரித்துள்ளனர்.
இந்த Contact Lens-கள் வட்டவடிவிலான LCD அமைப்பிலிருக்கும்.
இந்த LCD அமைப்பானது புகைப்படங்களைக்கூட இணைப்பில்லாக் கருவியின் மூலம் திரையிடக்கூடியது.
இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே இருப்பதுதான். ஆனால் அதில் சில புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் இந்த அறிவியலாளர்கள்.
இதுகுறித்து ஹெர்பர்ட் டி ஸ்மெட், தொழில்நுட்பம் நாளுக்குநாள் முன்னேறிக் கொண்டும், மெருகேரிக் கொண்டும் வரும் நிலையில் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என தெரிவித்துள்ளார்.