iOS 6.1 பீட்டா பதிப்பினை அறிமுகப்படுத்தியது அப்பிள்

அப்பிள் நிறுவனமானது தனது உற்பத்திகளுக்கென தனியான இயங்குதளத்தினை பயன்படுத்தி வருகின்றமை தெரிந்ததே.
அந்நிறுவனம் அண்மையில் iOS 6 இனை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது iOS 6.1 எனும் புதிய பீட்டா பதிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பீட்டா பதிப்பானது நான்காவது தடவையாக வெளியிடப்பட்டிருப்பதனால் iOS 6.1 Beta 4 என அழைக்கப்படுகின்றது.
மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கென சோதனைப் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கும் iOS 6.1 Beta 4 இல் புதிய வரைபட மென்பொருள் (Mapping API) ஒன்று இணைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும் தற்போதுள்ள iOS 6 இயங்குதளத்தினை iOS 6.1 இற்கு அப்டேட் செய்வது தொடர்பான தகவல்களை அப்பிள் நிறுவனம் இதுவரையில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...