சிறந்த வில்லனின் புதிய அவதாரம்

பில்லா- 2, துப்பாக்கி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த வித்யுத் ஜம்வாலுக்கு தற்போது புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் வெளியான துப்பாக்கியில் பார்வையாலேயே மிரட்டி ரசிகர்களைக் கொள்ளைகொண்டார்.



இந்நிலையில் இந்தியாவில், சிறந்த உடற்கட்டுள்ள ஐந்து பிரபலங்கள் அண்மையில் தெரிவு செய்யப்பட்டனர்.

இதில் வித்யுத் ஜம்வாலுக்கும் இடம் கிடைத்துள்ளதாம்.

வித்யுத்தைத் தவிர, பாலிவுட் நடிகர்களான ஹ்ருத்திக் ரோஷன், ஜோன் அப்ரஹாம், சல்மான்கான் மற்றும் பிரபல மல்யுத்த வீரர் யோகந்தர் ஆகியோரின் பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

அதிகமான திரைப்படங்களில் நடிப்பதை விட வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களில், வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன் என்று தன் விருப்பத்தை தெரிவிக்கிறார் வித்யுத்.

தற்போது கதாநாயகனாக நடிப்பதற்கான வாய்ப்புக்களும் இவர் வீட்டின் கதவை தட்டுகின்றனவாம்.


-->
Related Posts Plugin for WordPress, Blogger...