விமானத்தை கடத்த முயன்றவர்களுக்கு மரண தண்டனை ( Aircraft hijacking )
சீனாவில் விமானத்தை கடத்த முயன்ற நபர்களுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் உய்குர் பகுதியில் முஸ்லிம்கள் அதிகளவு வசிக்கின்றனர். இவர்களில் சிலர் தனி நாடு கேட்டும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அமைப்பை சேர்ந்த 6 பேர், ஜூன் மாதம் 29ஆம் திகதி ஹோட்டான் நகரிலிருந்து புறப்பட்ட விமானத்தை கடத்த முயன்றனர்.
இவர்களுக்கும், விமான ஊழியர்களுக்கும் நடந்த சண்டையில், 2 பேர் காயமடைந்து இறந்து விட்டனர்.
இதனையடுத்து விமானம் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியது. கடத்த முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மூசா யூசுப், இமின், ஓமர் ஆகியோருக்கு மரண தண்டனை அறிவித்தும், குற்றத்தை ஒப்புக்கொண்ட அலி மூசா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளது.
-->