உக்ரைன்இல் கடும் உறை பனி 37 பேர் பலி

உக்ரைன் நாட்டில் தட்பவெப்ப நிலை - 17 டிகிரிக்கும் கீழ் இருப்பதால், கடும் குளிருக்கு இதுவரையிலும் 37 பேர் பலியாகி உள்ளனர்.
ஐரோப்பாவின் கிழக்கில் உள்ள உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக பனிப் பொழிந்து வருகிறது.
அங்கு தட்பவெப்ப நிலை மைனஸ் 17 டிகிரிக்கும் கீழ் இருப்பதால், மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் இந்த மாதத்தில் மட்டும் 37 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் பலரது உடலின் வெப்பநிலை கணிசமாக குறைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வீடில்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்காக உக்ரைன் அரசு 1,500 தங்கும் இடங்களை அமைத்து, உணவு வழங்கி வருகிறது.
கடும் பனி பொழிவால் சாலையில் பனி குவியல்கள் காணப்படுகின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.





Related Posts Plugin for WordPress, Blogger...