தாள் வடிவில் USB பென் டிரைவ்

கணனியின் உதவியின்றி எந்தவொரு வேலையும் செய்ய முடியாது என்ற அளவிற்கு அவற்றின் பயன்பாடு இன்று அத்தியாவசியமானதாக மாறிவிட்டது.
அதேவேளை கணனிகளுடன் இணைத்து பயன்படுத்தப்படும் USB சேமிப்பு சாதனங்களின் பயன்பாடும் இன்றியமையாததாக காணப்படுகின்றது.
இதற்காக பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய USB சேமிப்பு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது IntelliPaper எனும் மிகவும் மெலிதான அளவுடைய புதிய USB சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தவிர 1GB தொடக்கம் 32 GB அளவுடையவையாக உருவாக்கப்பட்டுள்ள இவை எடுத்துச் செல்வதற்கு மிகவும் இலகுவாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது



-->
Related Posts Plugin for WordPress, Blogger...