நயன்தாராவின் அதிரடி மாற்றம் ( Nayanthara )
இனி 50 வயது தாண்டிய ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கப்போவதில்லை என்று தடாலடியாக தெரிவித்திருக்கிறார் நடிகை நயன்தாரா.
ஆர்யாவுடன் ராஜாராணி, அஜித்துடன் டைட்டில் வைக்கப்படாத படம், உதயநிதி ஸ்டாலின் உடன் ஒரு படம் என தமிழ்சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டுக்கு தயாராகியிருக்கும் நயன்தாரா தனது பொலிவிழந்த தேகத்தை மீண்டும் மெருகேற்ற கேரள ஆயூர்வேத ட்ரீட்மெண்ட்டை எடுத்து வருகிறார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தோம்.
இப்போது அதேபோல தினசரி வாழ்க்கை முறையையும் அவர் மாற்றிக் கொண்டிருக்கிறாராம், தினமும் தவறாமல் யோகா செய்வது, சுத்தமான சைவ உனவுகளை மட்டுமே சாப்பிடுவது, தினமும் 8 மணி நேரம் தூங்குவது என புதிய வாழ்க்கை முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா.
இதற்காக தான் நடிக்கும் படங்களில் நள்ளிரவு ஷூட்டிங் என்றால் அதை கண்டிப்பாக கேன்சல் செய்து விடுகிறாராம். இப்படி புதுப்பொலிவுடன் தான் மீண்டும் வர இருப்பதால் இனி வயதான, குறிப்பாக 50 வயதைத் தாண்டிய ஹீரோக்களின் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார் நயன்தாரா.
மேலும் “இப்போ இருக்கிற யூத் ஹீரோக்கள் தான் நல்ல சுறுசுறுப்போட இருக்காங்க, அவங்க தான் அடுத்தடுத்து படங்கள் நடிச்சிக்கிட்டே இருக்காங்க, அவங்க கூட நடிக்கிறது ரொம்ப கம்பர்டபுளா இருக்கு, அதனால் இனிமே யூத் ஹீரோக்கள் படங்கள் தான் என்னோட பர்ஸ்ட் சாய்ஸ்” என்று காரணம் சொல்கிறார் நயன்தாரா.
இது யாரையே குறிவெச்ச மாதிரி இருக்கே...?