ரஜினிக்கு சார்பாக பேசிய மாப்பிள்ளை Dhanush
எந்திரன் கதாபாத்திரம் போன்று கிடைத்தால் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு, அதெல்லாம் ரஜினியால் மட்டும் தான் முடியும் என்று பதிலளித்துள்ளாராம் தனுஷ். ரோபோவான எந்திரன் ஐஸ்வர்யா மீது காதல் கொள்ளும் காட்சிகள் அனைவரையும் கவர்ந்தன. இந்நிலையில் எந்திரன் கதாபாத்திரம் போல் அமைந்தால் அதில் நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு தனுஷ், எந்திரன் போன்ற கதாபாத்திரம் எல்லாம் சூப்பர் ஸ்டாராக இருப்பவர்களால் தான் முடியும். ரஜினி தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர். அது போன்ற கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை என்றார். ஆடுகளம் படத்திற்காக தேசிய விருது பெற்ற தனுஷ் தற்போது மரியான் மற்றும் ராஜ்னாஹா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். |