லினக்ஸ் உடன் சில விளையாட்டு
.jpg)
லினக்ஸ் வளர்ச்சிக்காக செயல்படும் லினக்ஸ் பெளண்டேஷன் (லாபநோக்கமற்ற அமைப்பு), லினக்ஸ் உருவாகும் கதையை ஒரு அனிமேஷன் வீடியோவாக வெளியிட்டிருக்கிறது.
லினக்ஸ் என்பது ஒரு ஆபரேடிங் சிஸ்டம் என்று அறியப்பட்டாலும், அதன் முக்கிய பகுதியை லினக்ஸ் கெர்னல் (kernel) என்று சொல்வார்கள்.
ஒரு கட்டிடம் கட்டும்போது அஸ்திவாரம் மட்டும் போட்டுவிட்டு அதை கட்டிடம் என்று சொல்லமுடியாது. அதேபோல் லினக்ஸ் கெர்னல் மட்டுமே லினக்ஸ் டிஸ்ட்ரிபியூஷன் ஆகிவிடாது.
அதனுடன் கிராபிகல் டெஸ்க்டாப், டிவைஸ் டிரைவர்கள், அப்ளிகேஷன்ஸ், இப்படி இன்னும் நிறைய சேர்த்தபிறகுதான் அதை நாம் ஆபரேடிங் சிஸ்டமாக பயன்படுத்த முடியும்.
பொதுவாக லினக்ஸ் கெர்னலை அடிப்படையாக பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆபரேடிங் சிஸ்டங்களை லினக்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன்ஸ் என்று அழைப்பது வழக்கமாகிவிட்டது. உதாரணம்: உபுன்டு, லினக்ஸ் மின்ட், டெபியன், ரெட் ஹேட்.
லினக்ஸ் கெர்னலை மட்டும் குறிப்பிடும்போது லினக்ஸ் என்றும், லினக்சை அடிப்படையாக கொண்டு உருவாகும் ஆபரேடிங் சிஸ்டங்களை GNU/லினக்ஸ் டிஸ்ட்ரிப்யூஷன்ஸ் என்றும் சொல்வதுதான் சரி.