புருசிலியாக நயன்தாரா !

படப்பிடிப்பில் நயன்தாராவுடன் ரசிகர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டார். அவரை படக்குழுவினர் விரட்டியடித்தனர். ‘ராஜா, ராணி’ படப்பிடிப்பில் இந்த சம்பவம் நடந்தது. 

பெசன்ட் நகர் கடற்கரையில் இதன் படப்பிடிப்பை நடத்தினர். இப்படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். அட்லீ குமார் இயக்குகிறார். இந்த படப்பிடிப்பில்தான் நயன்தாரா தனது பிறந்தநாளை சில தினங்களுக்கு முன் கேக் வெட்டி கொண்டாடினார். 

படப்பிடிப்பில் நிறைய ரசிகர்கள் திரண்டு பார்த்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் நயன்தாராவை நெருங்கி கோபமூட்டுவதுபோல் நடந்து கொண்டாராம். இதனால் அவரை நயன்தாரா கண்டித்தார். பதிலுக்கு ரசிகரும் நயன்தாராவை திட்டினாராம். இதனால் படக்குழுவினர் அந்த ரசிகரை விரட்டியடித்தனர். 

அவர்களை ரசிகர் அடிக்க பாய்ந்தார். பதிலுக்கு படப்பிடிப்பு குழுவினரும் அவருக்கு அடி கொடுத்து எச்சரித்து அனுப்பினர். இதனால் படப்பிடிப்பில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.



Related Posts Plugin for WordPress, Blogger...