உயிருடன் பல்லியை சாப்பிடும் இளைனன்

பல்லி என்றாலே நம்மில் பலருக்கு அதிர்ச்சி.அதனை துரத்தி விடுவார்கள். பல்லி விழுந்த சாப்பாட்டை கூட மக்கள் அதனை ஒதுக்கி விடுவார்கள். ஆனால் திண்டுக்கல் வாலிபர் ஒருவர்பல்லிகளை உணவாக உட்கொள்கிறார். 

அந்த அதிசய மனிதர் பெயர் அமுல்ராஜ்.(41) திண்டுக்கல் அருகே அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த விவசாயியான இவர் கண்ணில் தென்பட்ட பல்லிகளை உயிருடன் சாப்பிட்டு உள்ளார். ஆனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

எனவே தொடர்ந்து பல்லிகளை சாப்பிட்டு வந்து உள்ளார். வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களில் 5 பல்லிகளை பிடித்து சாப்பிடுகிறார். இதுவரை 64 பல்லிகளை பிடித்து சாப்பிட்டு உள்ளார். செம்பட்டிக்கு நேற்று வந்த அவர் ஒரு வீட்டில் 3 பல்லிகளை பிடித்து பொது மக்கள் முன்னிலையில் ஒவ்வொன்றாக வாயில் போட்டு கடித்து சாப்பிட்டு முடித்தார். இதுகுறித்து அமுல்ராஜ் கூறுகையில் எனக்கு பல்லிகளை சாப்பிட விருப்பமாக உள்ளது. இதனால் சாப்பிட்டு வருகிறேன்.



எனது உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. நான் ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்றவைகளை சமைத்து சாப்பிடுகிறேன். ஆனால் பல்லியை சமைக்காமல் உயிருடன் சாப்பிட்டு வருகிறேன். ஒரே நாளில் 50 பல்லிகளை சாப்பிட்டு சாதனை நிகழ்த்த எனக்கு விருப்பமாக உள்ளது என்றார்.


-->
Related Posts Plugin for WordPress, Blogger...