அறிமுகமாகின்றது அசத்தலான android Tablet
இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் சீனாவின் Aocos நிறுவனமானது கூகுளின் பிந்திய அறிமுகமான Android 4.1 Jelly Bean இயங்குதளத்துடன்கூடிய Aocos PX102 Tablet - இனை அறிமுகப்படுத்துகின்றது.
10.1 அங்குல அளவு மற்றும் 1280 x 800 Pixel உடைய IPS தொழில்நுட்பத்தில் அமைந்த திரையினைக் கொண்ட இவை 1.6 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Rockchip RK3066 ARM Cortex-A9 Processor ஆல் ஆனவையாகும்.
மேலும் பிரதான நினைவகமாக 1GB RAM - இனைக்கொண்டுள்ளதுடன் பிரத்தியேகமான Keyboard ஒன்றும் காணப்படுகின்றது.
16 GB சேமிப்பு வசதியுடன் வெளியாகும் இவற்றில் Bluetooth, Wi-Fi போன்ற வயர்லெஸ் தொழில்நுட்பங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவற்றின் பெறுமதியானது 209 அமெரிக்க டொலர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.