Ipad இல் புதிய அசத்தலான சேவை

விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடிய iPad Email அப்பிளிக்கேஷனான Incredimail - இனை அறிமுகப்படுத்திய Perion நிறுவனம் தற்போது குறித்த அப்பிளிக்கேஷனை iPad சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
பல அம்சங்களை உள்ளடக்கியதாகக் காணப்படும் இந்த அப்பிளிக்கேஷனானது விசேடமாக தொடுதிரைத் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இதன் உதவியுடன் Gmail, iCloud, Yahoo மற்றும் GMX போன்ற ஒன்லைன் மின்னஞ்சல் கணக்குகளை பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.
iOS 5.1 மற்றும் அதற்கு பிந்திய இயங்குதளங்களில் செயற்படக்கூடிய Incredimail அப்பிளிக்கேஷனை Apple iTunes App store  தளத்திலிருந்து முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Microsoft முடக்கும் ஓர் பழைய சேவை

கோப்புகளை ஒருங்கிணைத்து பாதுகாத்து தேக்கி வைக்கும் சேவையினை, கடந்த 2008ஆம் ஆண்டில் Windows Live Mesh என்ற பெயரில் மைக்ரோசாப்ட் தொடங்கியது.
இது Live Mesh, Windows Live Sync and Windows Live Folder Share எனவும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஒரு கால கட்டத்தில், இந்த சேவையினை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.
கோப்புகளை நம் சாதனங்களில் இல்லாமல் ரிமோட் இயக்கத்தில் சேமித்து, தேவைப்படும் போது எடுத்துப் பயன்படுத்தக் கொடுத்த வசதிகளில் Windows Live Mesh முதலிடம் பெற்றிருந்தது.
ஆனால் பின்னர் மைக்ரோசாப்ட் பல்வேறு வசதிகளை அளிக்க முற்படுகையில், Sky Drive என்ற இன்னொரு கட்டமைப்பினை ஏற்படுத்தியது. Live Mesh மூலம் தந்து வந்த வசதிகளை இன்னும் கூடுதல் எளிமையுடன் தர முடியும் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
தற்போது Live Mesh வசதிகள் அனைத்தையும் Sky Drive-ல் தருவதனால், அதன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் Sky Drive-ற்கு மாறும்படி கேட்டுக் கொண்டுள்ளது.
எனவே வரும் பிப்ரவரி 13ஆம் திகதி முதல் Live Mesh வசதிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும்,எந்த வித சப்போர்ட்டும் தரப்பட மாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy S II உடன் ஒரு சிறிய விளையாட்டு

அதிகளவானர்களால் விரும்பி பயன்படுத்தப்படும் Samsung நிறுவனத்தின் தயாரிப்பான Galaxy S II கைப்பேசிகள் யாவும் கூகுளின் Android இயங்குதளத்தில் செயற்படுவது அறிந்த விடயமே.
தற்போது இதற்கான Android 4.0.4 Ice Cream Sandwich Update - இனை AT&T நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பினை விட இரு முக்கிய மேம்படுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
அவையாவன கமெராவின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இதனை KIES software updating tool - இன் ஊடாக நிறுவிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்தலான அம்சங்களுடன் CCleaner

கணனியின் சேமிப்பு சாதனங்களில் தற்காலிகமாக தேங்கி அதன் இயக்கத்திற்கு இடையூறாக விளங்கும் கோப்புக்களை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருட்களில் CCleaner ஆனது சிறந்ததாகவும் இலவசமானதாகவும் காணப்படுகின்றது.
தற்போது இதன் புதிய பதிப்பான CCleaner v3.26 ஆனது மைக்ரோசொப்டின் Windows மற்றும் அப்பிளின் Mac இயங்குதளங்கள் என்பனவற்றிற்காக வெளியிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் Windows இயங்குதளத்திற்கென வெளியிடப்பட்ட பதிப்பில் Firefox add-on மற்றும் Google Chrome extension போன்றவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன் Office 2013, Adobe Reader 11.0 போன்றவற்றிலான கோப்புக்களை நீக்கும் வசதி உட்பட முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று Mac இயங்குதளங்களுக்காக வெளியிடப்பட்ட பதிப்பில் Google Chrome cache - இனை அதிவிரைவாக சுத்தம் செய்யக்கூடியவாறும் மெமரி பாவனையை சிறந்த முறையில் கையாளக்கூடியவாறும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
CCleaner v3.26 for Windows - Download - தரவிறக்க சுட்டி


Twitter இல் புதிய அம்சங்கள்

பிரபலமான சமூக இணையத்தளங்களுள் ஒன்றான Twitter தளத்தினை பல மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பிரபலமான Twitter தளமானது, தனது பயனர்களுக்காக Tweet செய்யப்பட்ட தகவல்களை தரவிறக்கம் செய்து கொள்வதற்கான வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் தகவல்களை தரவிறக்கம் செய்வதற்கு உங்கள் Twitter கணக்கினை பயன்படுத்தி உள்நுழையவும்.
இதன் பின் சக்கர வடிவில் இருக்கும் ஐகானை கிளிக் செய்து, Settings - ஐ தெரிவு செய்யவும். தொடர்ந்து Your Twitter Archive எனும் பகுதிக்கு சென்று Request your archive எனும் பொத்தானை அழுத்தவும்.
இப்போது உங்களால் விடுக்கப்பட்ட தரவிறக்க வேண்டுகோள் ஆனது Twitter குழுவினை சென்றடையும்.
இதன்பின்னர் அவர்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல்களை தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பு ஒன்றினை அனுப்புவார்கள், அதில் கிளிக் செய்து உங்கள் தகவல்கள் அனைத்தினையும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.



Free Software, Make Money online, Home make money, internet money, free money, Google, Make money internet, Google adword, Loan, Education Loan, Free Internet Money, Earn Money internet, Earn Money on internet, how to make money online, how to make money internet, how to make money home

உக்ரைன்இல் கடும் உறை பனி 37 பேர் பலி

உக்ரைன் நாட்டில் தட்பவெப்ப நிலை - 17 டிகிரிக்கும் கீழ் இருப்பதால், கடும் குளிருக்கு இதுவரையிலும் 37 பேர் பலியாகி உள்ளனர்.
ஐரோப்பாவின் கிழக்கில் உள்ள உக்ரைன் நாட்டில் கடந்த ஒரு மாதமாக கடுமையாக பனிப் பொழிந்து வருகிறது.
அங்கு தட்பவெப்ப நிலை மைனஸ் 17 டிகிரிக்கும் கீழ் இருப்பதால், மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் இந்த மாதத்தில் மட்டும் 37 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் பலரது உடலின் வெப்பநிலை கணிசமாக குறைந்து, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வீடில்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்களுக்காக உக்ரைன் அரசு 1,500 தங்கும் இடங்களை அமைத்து, உணவு வழங்கி வருகிறது.
கடும் பனி பொழிவால் சாலையில் பனி குவியல்கள் காணப்படுகின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.





அசத்தலான Alcatel One Touch Smart கைபேசிகள் சந்தையில்


Alcatel எனும் நிறுவனமானது ஏனைய கைப்பேசிகளிலிருந்து மேம்படுத்தப்பட்ட சில அம்சங்களை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்ட Alcatel One Touch Smart எனும் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
இக்கைப்பேசிகள் 4 அங்குல அளவுடையதும் WVGA தொழில்நுட்பத்தில் அமைந்ததுமான முழுமையான தொடுதிரை வசதியினைக் கொண்டுள்ளதுடன் 1GHz வேகத்தில் செயலாற்றும் Processor மற்றும் பிரதான நினைவகமாக 512MB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் 5 மெகாபிக்சல்கள் உடைய அதி துல்லியமான கமெரா 4GB வரையிலான உள்ளக மெமரி இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விலையானது 260 அமெரிக்க டொலர்களாகும்.

Related Posts Plugin for WordPress, Blogger...